'கல்யாணம் எப்போ' என பாலா கேட்ட கேள்விக்கு சிம்வு சொன்ன பதில் என்ன தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல் ஹாசனுக்கு பதிலாக சிம்பு ஹோஸ்ட் செய்ய உள்ளார். 

'கல்யாணம் எப்போ' என பாலா கேட்ட கேள்விக்கு சிம்வு சொன்ன பதில் என்ன தெரியுமா?

முதல் நாளிலியே சிம்பு அனைவரையும் கவர்ந்து விட்டார். மேலும் சிம்வு தான் வரப்போகிறார் என போட்டியார்கள் ஏற்கனவே யூகித்து வைத்திருந்ததாக கூறினார். சிம்புபை பார்த்ததும் அனைவரும் ஜாலி மூடுக்கு சென்று விட்டனர்.

ரசிகர்களின் கேள்விக்கு சிம்பு ஜாலியாக பதில் அளித்தார். இந்த வாரம் ட்ரெண்டிங் பிளேயர் யார் என்பதை சொல்லவில்லை.. இருந்தாலும் இரண்டு வைல்ட் கார்டு என்ட்ரிகளாக கலக்க போவது யாரு சதீஷ் மாற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

மேலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிம்பு வந்ததை முன்னிட்டு இந்த வாரம் நோ எவிக்ஷன் அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் ஷாரிக் மற்றும் அபினய் அனுப்பப்பட்டதை போல் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் தான் இருந்தது. ஆனால் சிம்பு வந்து பேசி அதனை சிங்கள் எவிக்ஷனாக மாற்றினாராம். மேலும் சிம்பு வந்த முதல் நாளிலே யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என நினைத்து இந்த வாரம் நோ எவிக்ஷன் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஷோ முடிந்து கிளம்பும் நேரத்தில் சிம்புவிடம் பாலா, ஒரு கேள்வி கேட்டார். கல்யாணம் எப்போ? என சிம்புவிடம் கேட்டார். இதை சற்றும் எதிர்பாராத சிம்பு, ஏன் நான் சந்தோஷமாக, ஜாலியாக, நிம்மதியாக இருப்பது உனக்கு பிடிக்கலையா என பதில் கேள்வி கேட்டார். இதுக்கு தாமரை, சுரேஷ் சக்கவர்த்தி ஆகியோர் திருமணம் செய்து கொள்ளுங்கள் ஒன்றும் ஆகாது என்றனர்.  திருமணம் எப்போது என்று இதுவரை யாரிடமும் சொல்லாத சிம்புவிடம் இன்று பாலா வெளிப்படையாகக் கேட்டதற்கு, அதற்கு சிம்புவின் பதில் கைதட்டலைப் பெற்றது.