கே.ஜி.எப் 2 ”பெரியப்பா” அனுபவத்தை கொடுத்தது...! பிளாக் பஸ்டர் படத்தை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்..!

பிளாக் பஸ்டர் படத்தை பார்த்துவிட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளபக்கத்தில் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். 

கே.ஜி.எப் 2 ”பெரியப்பா” அனுபவத்தை கொடுத்தது...! பிளாக் பஸ்டர் படத்தை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்..!

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் கே.ஜி.எப் 2. இந்தப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. அதுமட்டுமில்லாமல் கே.ஜி.எப் 2 இன்றளவும் 1100 கோடி ரூபாய் வசூலை தாண்டி இன்னும் வசூல் ஆகிக்கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி விரைவில் இந்த படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் கே.ஜி.எப் 2 படத்தின் இயக்குனரையும், படக்குழுவினரையும் தனது சமூக வலைதளத்தில் பாராட்டியுள்ளார். அதாவது  ’கேஜிஎப் 2’ படம் பார்த்துவிட்டேன், கதை திரைக்கதை எடிட்டிங் அனைத்தும் சூப்பராக உள்ளது. யாஷ் மிக நன்றாக நடித்துள்ளார். பெரியப்பா அனுபவத்தை கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு எனது நன்றி, படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்’ என்று பதிவிட்டுள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் பாராட்டால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.