சர்ப்ரைஸ் விசிட் அடித்த இயக்குனர் சங்கர் - எங்கேன்னு தெரியுமா?

லிங்குசாமி இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சங்கர் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.

சர்ப்ரைஸ் விசிட் அடித்த இயக்குனர் சங்கர் - எங்கேன்னு தெரியுமா?

லிங்குசாமி இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சங்கர் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.

சண்டக்கோழி 2 படத்திற்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் இயக்காமல் இருந்த இயக்குநர் லிங்குசாமி, தற்போது தமிழ், தெலுங்கில் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்பொத்தேனி ஹீரோவாகவும், கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் ஷங்கர்  சர்ப்ரைஸாக படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று லிங்குசாமி மற்றும் ராம் பொத்தேனியுடன் உரையாடியுள்ளார்.

படக்குழுவினர் இயக்குநர் ஷங்கருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றுள்ளனர்.