’மாமனிதன்' ரீ-ரிக்கார்டிங் பாடல் பதிவுக்கு இளையராஜா தன்னை அழைக்கவில்லை என்று சீனுராமசாமி குற்றச்சாட்டு!

’மாமனிதன்’ திரைப்படத்தின் ரீ-ரிக்கார்டிங் பாடல் பதிவுக்கு தன்னை அழைக்கவில்லை என "இளையராஜா மீது இயக்குநர் சீனுராமசாமி” குற்றம்சாட்டினார்.

’மாமனிதன்' ரீ-ரிக்கார்டிங் பாடல் பதிவுக்கு இளையராஜா தன்னை அழைக்கவில்லை என்று  சீனுராமசாமி குற்றச்சாட்டு!

விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு வடபழனியில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, இயக்குநர் சீனுராமசாமி, காயத்ரி, ஆர் கே சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய இயக்குநர் சீனுராமசாமி, விஜய் சேதுபதியின் நடிப்பு வளர்ச்சி குறித்து உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியை உலகமே திரும்பிப் பார்க்கும்" என்று கூறினார்.

மேலும், படத்தின் ரீ-ரிக்கார்டிங் பாடல் பதிவுக்கு இளையராஜா  தன்னை அழைக்கவில்லை என்று சீனுராமசாமி வருத்தப்பட்டார். பாடல் பதிவுக்கு தாம் நிராகரிக்கபட்டதாகவும் அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் வருத்தத்துடன் கூறினார். இளையராஜாவோடு நிறைய படங்களில் பணியாற்ற ஆசைப்படுவதாகவும், பேரன்பு வைத்திருப்பவர்களை காரணமின்றி நிராகரிக்கக் கூடாது" என இளையராஜாவுக்கு சீனுராமசாமி வேண்டுகோளும் விடுத்தார்.