இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை...! சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..!

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை...! சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..!

குடும்ப படங்களுக்கு புகழ்பெற்ற இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், இயக்குனர் லிங்குசாமி. இவர் 2001 ம் ஆண்டு மம்மூட்டி, முரளி, அப்பாஸ் நடிப்பில் உருவான ஆனந்தம் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து, ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா போன்ற படங்களை இயக்கி உள்ளார்.  மேலும் கடந்த 2014 ம் ஆண்டு வெளியான அஞ்சான் படத்தை இயக்கியவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு, சண்டக்கோழி 2 படத்தை இயக்கினார். ஆனால் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.     

அதனை தொடர்ந்து, தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தி வாரியர் படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ஜுலை 14 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி, ஒரு படத்திற்காக பெற்ற கடனை திருப்பி செலுத்துவதில்  பிவிபி கேபிட்டல்ஸ் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழங்கினால், சைதாப்பேட்டை நீதிமன்றம் லிங்குசாமிக்கு, 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. " எண்ணி ஏழு நாள் " என்ற படத்தை தயாரிப்பதற்காக, பிவிபி கேபிட்டல்ஸ் நிதி நிறுவனத்திடம் இருந்து இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், ரூ.1 கோடியே 3 லட்சம் கடனாக பெற்றுள்ளது. 

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், பிவிபி கேபிட்டல்ஸ் நிதி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடனை திருப்பி செலுத்த இயக்குனர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி, அந்த நிறுவனத்திற்கு ரூ. 1 கோடியே 3 லட்சத்திற்கான செக் கொடுத்துள்ளார். இந்த செக் பௌண்ஸ் (Cheque bounce ) ஆன நிலையில், பிவிபி கேபிட்டல்ஸ் நிதி நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், மீண்டும்  இயக்குனர் லிங்குசாமி மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.