இயக்குனர் டி ராஜேந்திரனுக்கு உடல்நிலை குறைவு...மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக சிம்பு அறிக்கை!

இயக்குனர் டி ராஜேந்திரனுக்கு உடல்நிலை குறைவு...மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக சிம்பு அறிக்கை!

நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தரின் உடல்நிலை குறித்து அவரது மகனும் நடிகருமான நடிகர் சிம்பு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். ஆனால், தற்போது அவருக்கு வயிற்றில் சிறிது இரத்த கசிவு ஏற்பட்டதனாலும், உயர் சிகிச்சைக்காகவும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல இருக்கிறோம் என்று  தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தற்போது ,முழு சுயநினைவுடன்தான் இருக்கிறார் என்றும், கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார் என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.