தாலி எடுத்துக் கொடுத்தாரா ரஜினி? நல்ல படியாக நடந்து முடிந்த விக்கி நயன் திருமணம்!

தாலி எடுத்துக் கொடுத்தாரா ரஜினி? நல்ல படியாக நடந்து முடிந்த விக்கி நயன் திருமணம்!

இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவை இந்த வியாழன், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரையுலக நண்பர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமான மற்றும் மிளிரும் வகையில் திருமணம் செய்து கொண்டார். 

மகாபளிப்புரத்தில் Sheraton Grand என்ற நட்சத்திர ஹோட்டலில் வெகு விமரிசையாக நடந்த திருமணத்திற்கு வருகை தந்திருந்த விருந்தினர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு தங்கள் ஆசிர்வாதங்களைப் பொழிந்தனர். காலை 10 மணி 24 நிமிட அளவில் நடிகை நயன்தாராவின் கழுத்தில் 'தாலி'யை விக்னேஷ் சிவன் கட்டினார்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் மேடையில் இருந்து இறங்கி வந்து, பார்வையாளர்களில் ஷாருக்கான் மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் அருகில் அமர்ந்திருந்த நடிகர் ரஜினிகாந்திடம் ஆசிர்வாதம் பெற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு சில வதந்திகளில், ரஜினி காந்த் தான் விக்கிக்கு தாலி எடுத்துக் கொடுத்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவை வெரும் வதந்தி தான் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தம்பதியினர் தங்கள் திருமண ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ள கைதிகளுக்கு உணவு வழங்கப்பட உள்ளது. இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட கோயில்களில் 'அன்னதானம்' ஏற்பாடுகளையும் இந்த புது தம்பதிகள் செய்துள்ளனர், அவர்களின் திருமணமானது அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

'நானும் ரவுடி தான்' படத்தின் மூலம் விக்னேஷ் சிவனுக்கு, கோலிவுட்டில் ஒரு பெரிய இடத்தைப் பெற்றுத் தந்த நடிகர் விஜய் சேதுபதி, தம்பதியரின் இந்த சிறப்பு நாளில் வாழ்த்து தெரிவிக்க தனது முழு குடும்பத்துடன் வருகை தந்தார்.

விழாவில் இயக்குனர்கள் மோகன் ராஜா, சிவா, கே.எஸ்.ரவிகுமார், அட்லி மற்றும் நடிகர்கள் சரத்குமார், ராதிகா, எஸ்.ஜே.சூர்யா, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், தயாரிப்பாளர் போனி கப்பூர், ஷாருக்கான், மனைவியுடன் விக்ரம் பிரபு, ஷாலினி தங்கை ஷாமிலி, பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி, சர்ச்சைக்குறிய மலையாள நடிகர் திலீப் அக்கியோரும் தென்பட்டிருக்கின்றனர்.

80க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த திருமணம் குறித்த தகவல்கள் தான் தற்போது இணையத்தை ஆட்டிப் படைத்து வருகிறது.