விரைவில் தியேட்டர்களில்.. செல்வராகவனின் ட்வீட்டால் தனுஷ் ரசிகர்கள் குஷி..!

10 வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு..!

விரைவில் தியேட்டர்களில்.. செல்வராகவனின் ட்வீட்டால் தனுஷ் ரசிகர்கள் குஷி..!

தனுஷ்: கோலிவுட்டை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் வரை தனது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். கோலிவுட்டை பொருத்தவரை டஜன் கணக்கில் படங்களை கைவசம் வைத்துக் கொண்டிருக்கிறார். 

திருச்சிற்றம்பலம்: என்னதான் ஹாலிவுட் வரை சென்றாலும் கோலிவுட்டில் சொல்லிக் கொள்ளும் படியாக பெரிய படங்கள் எதுவும் அவருக்கு வரவில்லை. அவற்றை எல்லாம் நொறுக்கும் படியாக அமைந்தது 'திருச்சிற்றம்பலம்' படம். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

நானே வருவேன்: இதனை தொடர்ந்து அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார் தனுஷ். அந்த வரிசையில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ், யோகிபாபு, இந்துஜா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ளது நானே வருவேன். கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் முடிக்கப்பட்டு, தற்போது வெளியீட்டிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. 

10 ஆண்டுகளுக்கு பிறகு சகோதரர்கள்: மயக்கம் என்ன படத்திற்கு பிறகு செல்வராகவன்-தனுஷ் கூட்டணி இப்படத்தில் இணைவதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், இரட்டை கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக வெளியான தகவலாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிற துவங்கியுள்ளது. 

ஃபர்ஸ்ட் லுக்: படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருபுறம் அமைதியான தனுஷ், மறு புறம் ஸ்டைலான தனுஷ் என இரு வேறு மாதிரியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 

விரைவில்: இந்த நிலையில், நானே வருவேன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் SOON IN THEATRES என இரண்டு போஸ்டர்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ஒரு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.