தனுஷ் கொடுத்த “திருச்சிற்றம்பலம்” பட அப்டேட் - இணையத்தில் கடும் வைரலாகும் விடீயோ!!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

தனுஷ் கொடுத்த “திருச்சிற்றம்பலம்” பட அப்டேட் - இணையத்தில் கடும் வைரலாகும் விடீயோ!!

யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்புகளை நடிகர் தனுஷ் வெளியிட்டிருக்கிறார், இப்படத்தின் முதல்பாடலான "தாய் கிழவி" என்ற பாடல் வரும் 24-ஆம் தேதி வெளியாகும் என ஒரு வீடியோ பதிவின் மூலம் தனுஷ் அறிவித்துள்ளார்.

மேலும் அதில், திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிள் ஜூன் 24 முதல். 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டிஎன்எ ஆம்,  இது ஸ்பெஷல் என்றும் பதிவிட்டிருக்கிறார். தனுஷ்-அனிருத் 7 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதும் பாடல்கள் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இப்பாடலில் இடம்பெற்றிருக்கும் தாய்க்கிழவி என்ற வரிகளானது நாட்டாமை திரைப்படத்தில் நடிகர் பொன்னம்பலம் மனோரமாவை பார்த்து தாய்க்கிழவி என ஆக்கிரோஷமாக அழைக்கும் வசனமாக இருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் தனுஷ் வெளியிட்டது முதல் சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது இந்த வீடியோ. இதனை கண்ட ரசிகர்கள் பாடல் எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்பில் உறைந்து போயுள்ளனர்.