ரஜினிகாந்த் பேசியும் கேட்காத தனுஷ்!! தோல்வியில் முடிந்த சமரச பேச்சுவார்த்தை...!

ரஜினிகாந்த் பேசியும் கேட்காத தனுஷ்!! தோல்வியில் முடிந்த சமரச பேச்சுவார்த்தை...!

நடிகர் தனுஷும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 18 வருடங்கள் சுமூகமாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தனுஷும், ஐஷ்வர்யாவும் தாங்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தனுஷ் - ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பைப் பார்த்த ஒட்டுமொத்த  ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தற்போது தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து பல்வேறு தரப்பான தகவல்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்ததால் தான் தற்போது விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், ஐஷ்வர்யாவின் தந்தையுமான  ரஜினிகாந்த் இருவரிடமும் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனுஷிடம் ரஜினிகாந்த செய்த சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விட்டுக்கொடுக்காமல் அவர்களின் முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் ரஜினியின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.