ரூ.150 கோடியில் புதிய வீடு கட்டும் தனுஷ்..!!

சென்னையின் மையமான போஸ் கார்டனிலேயே தனது கனவு மாளிகையை சுமார் ரூ.150 கோடி செலவில் கட்டுகிறார் தனுஷ்.

ரூ.150 கோடியில் புதிய வீடு கட்டும் தனுஷ்..!!

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் தனுஷ். விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகி வசூல் வேட்டையை அடிக்கும் என நாம் அறிந்த ஒன்றே. அந்த வகையில் 

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் தியேட்டரில் ரிலீசான ஒரு மாதத்திற்குள்ளாகவே ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. அடுத்தபடியாக தனுஷ் நடித்த கர்ணன் படமும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில் சென்னையில் ரஜினி வீடு அமைந்திருக்கும் போயஸ் கார்டன் பகுதியிலேயே புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார் தனுஷ். போயஸ் கார்டனில் வாங்கிய 8 கிரவுண்ட் இடத்தில் சமீபத்தில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் ரஜினி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தனுஷின் இந்த கனவு வீடு சுமார் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது என தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளது.