ரெளடி பேபி சாங்கின் சாதனைக்கு வந்த திடீர் பிரச்சனை..! தனுஷ் தரப்பினர் அதிர்ச்சி..!

ரெளடி பேபி சாங் இடம்பெற்றிருந்த வொண்டர்பார் நிறுவனத்தின் யூடியூப் சேனலை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதால் தனுஷ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்ததாக  கூறப்படுகிறது.

ரெளடி பேபி சாங்கின் சாதனைக்கு வந்த திடீர் பிரச்சனை..! தனுஷ் தரப்பினர் அதிர்ச்சி..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக விளங்குபவர்  நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்  ”மாரி 2”. இந்த படத்தில் இடம்பெற்ற “ரெளடி பேபி” சாங் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.  தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வெண்டர்பார் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் இடம் பெற்ற இந்த பாடல், கோடிக்கணக்கான பார்வையாளர்களை பெற்று சாதனை செய்தது.

ஏற்கனவே வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் ’3’,  ‘எதிர்நீச்சல்’,  ’காக்கா முட்டை’ , ‘மாரி’,  ’காலா’ உள்ளிட்ட படங்கள் தயாராகிய நிலையில், இதன் யூடியூப் சேனலில் ”ரெளடி பேபி” சாங் இடம்பெற்று சாதனை புரிந்ததுள்ளது.

இந்நிலையில் மாரி 2 படத்தின் பாடல் இடம்பெற்ற வொண்டர்பார் நிறுவனத்தின் யூடியூப் சேனலை தற்போது மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால் தனுஷ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த யூடியூப் சேனலை மீட்கும் நடவடிக்கையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் இறங்கி உள்ளதாகவும் விரைவில் இந்த சேனல் மீட்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.