
நடிகர் தனுஷ் தனது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாகவும் தானும் ஐஸ்வர்யாவும் பிரிய போவதாகவும் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திரைபிரபலங்கள் அனைவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை பேசி தீர்ப்பதற்காக தனுஷை சந்திக்க ரஜினி முயற்சித்ததாகவும், ஆனால் ரஜினிகாந்த் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக அவரது சந்திப்பை தனுஷ் தவிர்த்ததாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இன்னும் சட்டரீதியாக பிரியாத நிலையில் இரு தரப்பு பெரியவர்கள் இணைந்து இரண்டு குழந்தைகளுக்காக மீண்டும் சேர்த்து வைக்க முயற்சி செய்வார்கள் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.