மகன் கேட்ட ஒரே ஒரு கேள்வி...! அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற தனுஷ்-ஐஸ்வர்யா?

மகன் கேட்ட ஒரே ஒரு கேள்வி...! அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற தனுஷ்-ஐஸ்வர்யா?
Published on
Updated on
2 min read

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். முன்னதாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை தான் பிரிய முடிவு செய்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா தனது பெற்றோர் பிரிவு குறித்து கேட்ட ஒரே ஒரு கேள்வி இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிக்கு 15 வயதில் யாத்ரா என்ற மகனும், 11 வயதில் லிங்கா என்ற மகனும் உள்ளனர். இதில் யாத்ராவுக்கு 15 வயது ஆனதால் , கொஞ்சம் விவரமாக இருப்பதாகவும், அவர் கேட்கும் கேள்விக்கு சிலசமயம் ரஜினிகாந்தே பதில் சொல்ல முடியாத அளவுக்கு திணறிபோவார் என்றும், அவ்வளவு புத்திசாலிதனமாக வளர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் உங்கள் பெற்றோர் ஒருவேளை நிரந்தரமாக பிரிந்தால் நீங்கள் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள் என யாத்ராவிடம் கேட்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த யாத்ரா, ‘என் அம்மாவிடம் அவருடைய அப்பா அல்லது அம்மா இருவரில் யாராவது ஒருவருடன் தான் இருக்க வேண்டும் என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? என்றும் இதே கேள்வியை எனது அப்பாவிடம் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? என்றும் திருப்பி கேள்வி கேட்டதால் கேள்வி கேட்டவர்கள் வாயடைத்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், யாத்ராவின் இந்த கேள்வி குறித்து ஐதராபாத்தில் இருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்ததாகவும், இந்த கேள்விக்கு அவர்கள் இருவராலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு திக்குமுக்காடி போனதாகவும் கூறப்படுகிறது. இதனால் மகன்களின் எதிர்காலம் கருதி மீண்டும் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com