தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்புக்கு இடையில் ரசிகர்களை குஷிபடுத்திய தகவல்!!

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்புக்கு இடையில் ரசிகர்களை குஷிபடுத்திய  தகவல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் உருவாகி வருகிறது.

இதனிடையே நேற்று ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகும் படி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் தனுஷ். கிட்டத்தட்ட 18 வருடங்கள் சுமூகமாக சென்றுகொண்டிருந்த எங்களது திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரை பிரிவதாக அறிவித்து இருந்தார்.

இதேபோல் ஐஸ்வர்யா தனுஷும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் பிரிவு குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து பல நட்சத்திரங்களும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சோகமான சூழ்நிலைக்கு இடையே தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. 

சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான புஷ்பா பட இயக்குனர் சுகுமாருடன் தனுஷ் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்து அறிவிப்புக்கு பிறகு  ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.