செல்வராகவனை பொது வெளியில் திட்டிய தனுஷ் என்ன காரணம் முனுமுனுக்கும் கோலிவுட் வட்டாரம்

செல்வராகவனை பொதுவெளியில் திட்டிய தனுஷ்

செல்வராகவனை பொது வெளியில் திட்டிய தனுஷ் என்ன காரணம் முனுமுனுக்கும் கோலிவுட் வட்டாரம்
செல்வராகவனின் தம்பியான தனுஷ், தமிழ் சினிமா மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் கால் பதித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வரும் தனுஷ், தனது அண்ணனை ட்விட்டரில் வெளிப்படையாக திட்டியுள்ளார். 
செல்வராகவன் தனது கல்லூரி நண்பர்களுடன் இருக்கும் சிறுவயதை புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, என்னை இந்த கும்பலில் கண்டுப்பிடிப்பது மிகவும் எளிது என கூறியிருந்தார். இந்த ட்விட்டருக்கு கீழே கருத்து தெரிவித்த தனுஷ் கும்பலை வழிநடத்துபவன் தான் எப்போதும் போல என பதிலளித்துள்ளார். 

அதற்கு செல்வராகவன் உன்னிடம் இது போன்று பள்ளி, கல்லூரி நண்பர்களுடனான புகைப்படம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். தான் கல்லூரிக்கே சென்றதில்லை எனவும், கல்லூரி நட்பு எந்த அளவு மகிழ்ச்சியை தரும் என தனக்கு தெரியாது எனவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் தனுஷ். பள்ளி காலங்களை போன்றே தான் கல்லூரி காலமும், ஆனால் கல்லூரி நட்பு வட்டாரங்களுடன் வெளியில் நாய் போல சுற்றி திரிவது ஒரு மகிழ்ச்சி என செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார். 

இதனால் கடுப்பான தனுஷ் ”வெறுப்பேத்தாத டா” என வெட்டவெளியில் செல்வராகவனை திட்டி பதிவிட்டுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் தயாராகும் ”நானே வருவேன்” படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.