என்னால அழுகையை அடக்கவே முடியல...இயக்குனர் நெல்சனால் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்ற டிடி!!

என்னால அழுகையை அடக்கவே முடியல...இயக்குனர் நெல்சனால் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்ற டிடி!!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய ‘COFFEE WITH DD' நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் டிடி - யாகாவே பதிந்துவிட்டார். அதற்கு பிறகு அவர் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருந்து வருகிறது.

இதற்கிடையில் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ்வாக இருக்கும் டிடி அவ்வப்போது  தனது புகைப்படத்தையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப்போகும் 169 ஆவது படம் குறித்த அப்டேட் வீடியோவை பதிவிட்ட டிடி, என்னால அழுகையை அடக்கவே முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப்போகும் 169 ஆவது படம் குறித்த அப்டேட் வீடியோவாக நேற்றிரவு சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அனிருத் இசையமைப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 169 ஆவது படம் என்ற பீஜியத்துடன் அந்த வீடியோ அமைந்திருந்தது. அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனையடுத்து இந்த வீடியோவை பார்த்த டிடி, இயக்குநர் நெல்சனுக்கு தனது உற்சாகத்தையும் பாரட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் வேலை பார்த்ததன் மூலம் டிடியும், இயக்குனர் நெல்சன் திலிப் குமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். 

இதைத்தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுத்த நெல்சன் “கோலமாவு கோகிலா“, சமீபத்தில் “டாக்டர்“ அடுத்து தளபதி நடிப்பில் “பீஸ்ட்“ தற்போது சூப்பர் ஸ்டார் திரைப்படம் என்று அசுர வளர்ச்சியில் இருந்துவருகிறார்.  அவரின் வளர்ச்சியை பாராட்டும் விதமாக  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப்போகும் 169 ஆவது படம் குறித்த அப்டேட் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ரொம்ப ஹேப்பி என்று இயக்குநர் நெல்சனுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்க்கும் தனது நன்றியைத் தெரிவித்து உள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.