இவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்...ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த டிடி..!!!

 இவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்...ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த டிடி..!!!

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் கூட நயன்தாரா கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். அவை சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பார்க்கப்பட்டது.

திவ்யதர்ஷினி தற்போது உலகமுழுவதும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் பாரிஸில் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சா சாப்பிட்டுள்ளார். அந்த பீட்சா குறித்தும் அதை செய்து கொடுத்த செஃப் குறித்தும் புகழ்ந்து தள்ளினார் திவ்யதர்ஷினி. அவரை சந்தித்தது மட்டுமின்றி அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.