ஐசரி கணேசனின் புகைப்படத்தை பூஜை அறையில் மாட்டிய கூல் சுரேஷ்.. அவ்வளோ பெரிய கிஃப்டா?

வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து தயாரிப்பாளர் படக்குழுக்கு பரிசு வழங்கி வருகிறார்..!

ஐசரி கணேசனின் புகைப்படத்தை பூஜை அறையில் மாட்டிய கூல் சுரேஷ்.. அவ்வளோ பெரிய கிஃப்டா?

பரிசுகளை வாரி வழங்கிய தயாரிப்பாளர்:

வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் 
நடித்தவர்களுக்கும், படக்குழுவினர் சிலருக்கும் தயாரிப்பாளர் பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். இதன் மூலம் படம் வசூலில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. 

வெந்து தணிந்தது காடு:

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேசனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் இயக்கத்தில், சிம்பு மற்றும் சித்தி இத்னானி ஆகியோரது நடிப்பில் கடந்த 15-ம் தேதி வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. 

காதல் டூ கேங்ஸ்டார்:

ஒரு கடைக்கோடி கிராமத்தில் முள்காட்டில் வேலைப் பார்த்து வரும் 20 வயது இளைஞன் பாம்பே சென்று அங்கு எப்படி தாதாவாக வளர்கிறான் என்பது தான் படத்தின் ஒரு வரிக் கதை. காதல் படங்களில் மட்டுமே இதுவரை கலக்கி வந்த கௌதம் வாசுதேவ், கேங்ஸ்டார் படத்தில் இப்படி மிரட்டுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. 

சிம்புவின் ட்ராஃபர்மேஷன்:

இந்தப் படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக இருந்தது என்றால் அது சிம்புவின் உடல் டிராஃபர்மேஷன் தான். செக்க சிவந்த வானம் படத்தில் அவர் இருந்த உடம்பை பாதியாக குறைத்து வெந்து தணிந்தது காடு படத்தில் 21 வயதாக வந்து நின்றார் சிம்பு. 

கூல் சுரேஷ்:

படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், படம் மாபெரும் வெற்றியடைந்தது. சிம்பு இதுபோன்ற ஒரு படத்தில் நடிக்கின்றார் என்பதை கடந்த ஒன்றரை வருடங்களாக மக்களிடம் சொல்லிக் கொண்டே இருந்தது என்றால் அது நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் தான். 

ட்ரெண்டிங் செட்டர்:

எங்கு சென்றாலும் வெந்து தணிந்தது காடு, இன்னாருக்கு வணக்கத்தை போடு என தியேட்டர் வாசலில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் படத்திற்கு மிகப்பெரிய ப்ரோமோஷன் செய்திருந்தார். சிம்புவும் கூல் சுரேஷை பாராட்டியிருந்தார். 

ஐபோன் பரிசு:

இந்த நிலையில், படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து சிம்புவிற்கு ஒரு சொகுசு காரையும், இயக்குநர் கௌதம்க்கு புல்லட் பைக்கையும் பரிசாக கொடுத்திருந்த தயாரிப்பாளர் ஐசரி கணேசன், கூல் சுரேஷ்க்கு ஒரு ஆப்பிள் ஐ போனை பரிசாக வழங்கியுள்ளார். 

பூஜை அறையில் புகைப்படம்:

இதுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள கூல் சுரேஷ், பரிசுப் பொருட்களை எதிர்பார்த்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு நான் ப்ரோமோஷன் செய்யவில்லை என கூறியிருக்கிறார். தனது குழந்தைகளின் கல்வி செலவை தானே ஏற்பதாகவும் ஐசரி கணேசன் கூறியிருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள கூல் சுரேஷ், எனது பூஜை அறையில் உங்களது புகைப்படத்தை மாட்டி வைப்பேன் என கூறியுள்ளார்.