கிங்ஸ்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்...

நகைச்சுவை நடிகர் கிங்ஸ்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிங்ஸ்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்...

கோலமாவு கோகிலா, எ.கே.ஜி. டாக்டர், கட்டா குஸ்தி உட்பட பல படங்களில் நடித்தவர் கிங்ஸ்லி.

தற்போது லெக்பீஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கிங்ஸ்லி சில நாட்கள் மட்டும் இப்படத்தில் நடித்து விட்டு, மீதி காட்சிகளில் நடிக்க மறுத்து வருவதாக தயாரிப்பாளர் மணிகண்டன் புகார் அளித்துள்ளார்.

அவருக்கு வழங்கிய சம்பளத்தையும் தயாரிப்பு செலவுக்கான நஷ்ட ஈடு தொகையையும் வாங்கி தரவேண்டும் என புகாரில் கூறியுள்ளார். நடிகர் கிங்ஸ்லிக்கு ரசிகர்கள் படு பயங்கரமாக இருக்கும் நிலையில், இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நடிகர் கிச்சா சுதீப் - பை காண முடியாமல் ரசிகர்கள் ரகளை...