விரைவில் வெளியாகும் "ஸ்குவிட் கேம் சீசன் 2"

விரைவில் வெளியாகும் "ஸ்குவிட் கேம் சீசன் 2"

ஸ்குவிட் கேம் சீசன் 2 விரைவில் வெளியாகும் என அந்த வெப் தொடரின் இயக்குநர் Hwang Dong-Hyuk தெரிவித்துள்ளார்.

நெட்ஃபிலிக்ஸ் தொடரான ஸ்க்விட் கேம் வெளியான சில நாட்களிலேயே ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பகுதி எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், ஸ்குவிட் கேம் சீசன் 2 இயக்குவது குறித்து திட்டமிட்டு வருவதாக அத்தொடரின் இயக்குநர் Hwang Dong-Hyuk தெரிவித்துள்ளார். விரைவில் இதற்கான அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் எனவும், 2ஆம் பாகத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.