நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் நிதியுதவி..! நெகிழ்ந்து நன்றி தெரிவித்து வீடியோ..!

சிறுநீரக பிரச்னையால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் போண்டா மணி அனுமதி..!

நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் நிதியுதவி..! நெகிழ்ந்து நன்றி தெரிவித்து வீடியோ..!

தெரிந்தும், தெரியாத நடிகர்கள்:

சினிமாவில் இன்று நாம் திரையில் முன்னணி நடிகர்களாக பார்க்கும் நடிகர்களை தாண்டி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள், ஹீரோக்களுடன் நண்பர்களாக நடிப்பவர்கள், நகைச்சுவை நடிகர்களோடு சேர்ந்து சிறு கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் நிலையை, முன்னணி நடிகர்களோடு ஒப்பிடவே முடியாது. அவர்கள் வாங்கும் சம்பளத்தின் 1 பங்கினைக் கூட இவர்கள் வாங்க மாட்டார்கள்.

பொருளாதார சிக்கல்:

அப்படி சினிமாவை விட்டு பாதியிலேயே சென்றவர்கள், சினிமாவில் பல நூறு படங்களில் நடித்தும் பெரிதாக பொருளாதார வசதி இல்லாதவர்கள் இங்கு நிறைய உண்டு. அவ்வாறு சினிமாவில் முகம் தெரிந்தும், பொருளாதாரத்தில் நலிவடைந்து, இறுதியில் உடல் நலம் குன்றி உயிரிழந்தவர்கள் பலர். இவர்களுக்கு  உதவ முன்வருவதும் சில சினிமா நடிகர்கள் மட்டும் தான். 

சிகிச்சை பெற்று வரும் போண்டா மணி:

அப்படி சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் நடிகர் போண்டா மணி. நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். உதாரணத்திற்கு சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்ற காமெடியில் இவரது நடிப்பு பிரபலமானது. 

சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை:

வயது மூப்பாலும், சரியான வாய்ப்பு கிடைக்காததாலும் இவர் தற்போது சினிமாவில் இருந்து தள்ளி வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சிறுநீரக பிரச்னையால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போண்டா மணிக்கு, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும், மேல் சிகிச்சைக்காக அவருக்கு உதவக் கோரியும் நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்:

இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவரை நேரில் சென்று சந்தித்து மருத்துவ செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் என ஆறுதல் கூறியிருந்தார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்த நடிகர் வடிவேலு நிச்சயம் போண்டா மணிக்கு உதவுவேன் எனக் கூறியிருந்தார். 

சங்கங்கள் நிதியுதவி:

அத்தோடு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் மனோபாலா போண்டா மணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு, நிதியுதவி வழங்கினார். அதேபோல சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பிலும் அவருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. 

தனுஷ் ரூ.1லட்சம் நிதியுதவி:

இந்த விஷயம் குறித்து தகவலறிந்த நடிகர் விஜய் சேதுபதி போண்டா மணிக்கு ரூ.1லட்சம் அளித்திருந்தார். அத்தோடு தற்போது நடிகர் தனுஷும் ரூ.1லட்சம் உதவி அளித்திருக்கிறார். இதற்காக நடிகர் தனுஷூக்கு நன்றி தெரிவித்து போண்டா மணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.