நடிகராகிறார் கோமாளி பட இயக்குனர்...! வெளியான படத்தின் டீசர்...!

நடிகராகிறார் கோமாளி பட இயக்குனர்...! வெளியான படத்தின் டீசர்...!

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற 90ஸ் கிட்ஸ்களுக்கு மிக நெருக்கமான திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது வெள்ளித்திரையில் நடிகராகவும் களமிறங்கியுள்ளார். 

குறும்படங்களை இயக்கி மக்களை ரசிக்க வைத்த இயக்குனர் பிரதீப் அந்த படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அந்த குறும்படங்கள் எல்லாம் மக்களை பெரிது ரசிக்க வைத்தது. சில ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு, நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தை இயக்கி இருந்தார். அவரது முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 90ஸ் கிட்ஸ்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு, என பலர் நடித்து நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் வசூலை வாரிக்குவித்தது. 

இந்நிலையில் தற்போது பிரதீப் அடுத்ததாக லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி, அதில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்டின் தயாரிப்பில், பிரதீபுடன் இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆஜித் என பலர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  

இன்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. ஒரு என்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரைலரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். கலகலப்பாகவும், யதார்த்தமாகவும் செல்லும் இந்த ட்ரைலர் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரசிகர்கள், இந்த படம் பிரதீப் இயக்கிய குறும்படமான அப்பா லாக் படத்தின் தொடர்ச்சியாக இருக்குமோ என்ற கேள்வியும் கேட்டு வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.