”ஜெய்பீம்” படத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழும் சீனர்கள்...வைரலாகும் வீடியோ!

”ஜெய்பீம்” படத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழும் சீனர்கள்...வைரலாகும் வீடியோ!

ஜெய் பீம் படத்தை பார்த்த சீன மக்கள் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெய்பீம் திரைப்படம்:

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் சூர்யா நடிப்பில், பிரபல ஓடிடி தளத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி வெளியான திரைப்படம் “ஜெய்பீம்”. இந்த படத்தில் நடித்த நடிகர் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் உள்ளிட்ட அனைவரின் கதாபாத்திரங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/entertainment/If-love-can-continue-even-if-you-dont-tie-a-thali-thats-the-value-of-love--PaRanjiths-next-movie-trailer-released

சர்வதேச அளவில் அங்கீகாரம்:

தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்ற “ஜெய்பீம்” படத்திற்கு, சர்வதேச அளவிலும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

படத்தை பார்த்து அழுகை:

இந்நிலையில் சீனாவில் நடைபெற்று வரும் பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் ”ஜெய் பீம்” திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது படத்தை பார்த்த சீன மக்கள் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். அதுமட்டுமின்றி அப்படத்தில் நடித்துள்ள நடிகர்களையும் வியந்து பாராட்டியுள்ளனர். 

வீடியோ வைரல்:

பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில், ”ஜெய்பீம்” படத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுத சீன மக்களின் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.