நடிகர் விஜய் வீட்டிற்கு திடீரென விசிட் அடித்த முதலமைச்சர்!!

நடிகர் விஜய் வீட்டிற்கு திடீரென விசிட் அடித்த முதலமைச்சர்!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர். ரசிகர்களால்  ’தளபதி’ என்று அன்புடன் அழைக்கப்படும் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாக உள்ள  ‘பீஸ்ட்’ படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. 

இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டிற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் சென்று சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நடந்ததாகவும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் இரு தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. இதையடுத்து நடிகர் விஜய் வீட்டிற்கு ஒரு மாநில முதலமைச்சரே நேரில் சென்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே நடிகர் விஜய் அரசியல் வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்வி பரவி வரும் நிலையில், தற்போது மாநில முதலமைச்சருடனான திடீர் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நடிகர் விஜய் அரசியலில் குதிக்க போகிறாரா? தமிழக அரசியலில் ஈடுபடும் முன் முதல்கட்டமாக புதுவை அரசியலில் குதிக்க போகிறாரா? என இந்த சந்திப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.