விரைவில் சந்திரமுகி -2 : டைட்டிலை வாங்கிய லைகா நிறுவனம்!! ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்!

ரஜினி நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாகவும் இதனை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

விரைவில் சந்திரமுகி -2 : டைட்டிலை வாங்கிய லைகா நிறுவனம்!! ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்!

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இப்படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாக வாசு முயற்சித்து வந்தது அறிந்ததே. ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது.

இதனால் இரண்டாம் பாகத்தை வேறு கதாநாயகர்களை வைத்து எடுக்க முயன்று வந்த நிலையில் இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க சம்மதம் தெரிவிக்க அதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இப்படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் சம்மதித்தது. இந்நிலையில் படத்தின் தலைப்பை பெறுவதில் முதல் பாகத்தைத் தயாரித்த சிவாஜி கணேசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வைத்திருந்த டைட்டில் உரிமையை தற்போது லைகா நிறுவனம் வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.