பிரபல நடிகை சாப்பிட்ட தோசையில் கிடந்த தங்க மூக்குத்தி..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

பிரபல டி.வி. நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி இருந்தது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை சாப்பிட்ட தோசையில் கிடந்த தங்க மூக்குத்தி..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்
Published on
Updated on
1 min read

கேரளாவில் கொச்சி காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் பிரபல நடிகை சூரிய தாரா. இவர் ஏராளமான மலையாள தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று  இரவு படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய அவர், அப்பகுதியில் உள்ள ஒரு கடையில்  தோசை மாவு பாக்கெட் ஒன்றை வாங்கி வந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்ததும் அதனை அவரது தாயார் தோசையாக சுட்டுத்தர குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டனர். 

அப்போது நடிகை சூரிய தாரா சாப்பிட்ட தோசையில் மட்டும் தங்க மூக்குத்தி ஒன்று கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சூரிய தாரா இது குறித்து சமூக வலைதளத்தில்  பதிவிட்டிருந்தார்.

அதில் இந்த தோசையை குழந்தைகள் சாப்பிட்டிருந்தால் உடல் நலனுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கும். தோசை மாவை பேக் செய்யும் போது எதிர்பாராத விதமாக மூக்குத்தி மாவில் விழுந்திருக்கலாம் என்று  அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com