’விக்ரம் 3’ படத்தில் நடிகர் விஜய்யை எதிர்பாக்கலாம்மா...? என்ற கேள்விக்கு; கமலின் சர்ப்ரைஸ் பதில் என்ன தெரியுமா..?

’விக்ரம் 3’ படத்தில் நடிகர் விஜய்யை எதிர்பாக்கலாம்மா...? என்ற கேள்விக்கு, அவருக்கு ஓகேன்னா அதற்கும் தயாராகதான் உள்ளோம் என உலகநாயகன் கமல்ஹாசன் கூறியிருப்பது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

’விக்ரம் 3’ படத்தில் நடிகர் விஜய்யை எதிர்பாக்கலாம்மா...? என்ற கேள்விக்கு; கமலின் சர்ப்ரைஸ் பதில் என்ன தெரியுமா..?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வருகிற ஜீன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பான் இந்திய திரைப்படமாக ரிலீசாகவுள்ள இப்படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு தன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் என்பதால் அதன் புரொமோஷனுக்காக நடிகர் கமல் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு புரொமோஷன் விழாவில் கமல்ஹாசன் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது விழாவில் கலந்து கொண்ட ஒருவர் கமலிடம், ‘விக்ரம்’ படத்தின் மூன்றாவது பாகத்தில் தளபதி விஜய்யை எதிர்பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘விக்ரம் 3’ படத்திற்காக ஏற்கனவே ஒருவரை தேர்வு செய்து வைத்துள்ளோம் என்று சூர்யாவை மறைமுகமாக கூறிய கமல், அதே நேரத்தில் விஜய் ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்கவும் ராஜ்கமல் பிலிம்ஸ் தாயராக இருப்பதாக கூறி கேள்வி கேட்டவரே அதிரும் படியாக ஒரு சூப்பர் பதிலை கூறியுள்ளார்.

இருப்பினும் ஏற்கனவே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில்  கமலின் தற்போதைய பதிலால் விரைவில் கமல் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.