அறுவை சிகிச்சையால் உயிரிழந்த பிரேசிலை சார்ந்த அழகி...

2018 ஆம் ஆண்டு மிஸ் பிரேசில் பட்டம் பெற்ற கிளெய்சி கொரிய்யா தனது தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அறுவை சிகிச்சையால் உயிரிழந்த பிரேசிலை சார்ந்த அழகி...

இவர் தென்கிழக்கு நகரமான மெகேயில் நிரந்தர ஒப்பனை நிபுணராக பணியாற்றி வந்தவராவார்.

இதன் இடையில் இவருக்கு தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அண்மையில் அதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து கிளெய்சிக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்த ஐந்து நாட்களில் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று அதன் பின் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையை தொடர்ந்து தனது சுயநினைவை இழந்து இரண்டு மாதங்களாக மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கிளெய்சி கொரிய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மேலும் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரை விசாரிக்கவும் கிளெய்சியின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இவரின் இறப்பு செய்தியை கேட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.