ட்விட்டரில் ட்ரெண்டாகும் பய்காட் விக்ரம் வேதா ஹாஷ்டேக்...! புறக்கணிப்புக்கான காரணங்கள் என்ன ..!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் பய்காட் விக்ரம் வேதா ஹாஷ்டேக்...!  புறக்கணிப்புக்கான காரணங்கள் என்ன ..!

தமிழில் பெரும் வெற்றி கண்ட விக்ரம் வேதா திரைப்படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு, திரைப்படம் வெளியையீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் ட்விட்டரில் பய்காட் விக்ரம் வேதா என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் படங்களுக்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. முன்னதாக ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் வெளியாகும் போதும் பல எதிர்ப்புகள், புறக்கணிப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஹ்ரித்திக் ரோஷன், சைப் அலி கான் நடித்த விக்ரம் வேதா திரைப்படத்திற்கும் எழுந்துள்ளது.

தமிழில், கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகி நல்ல வெற்றியைக் கண்ட இந்த திரைப்படம் தான் தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹ்ரித்திக் ரோஷன், சைப் அலி கான் நடித்துள்ள இந்த விக்ரம் வேதா திரைப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட், பிரைடே பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்நிலையில் ட்விட்டரில் பய்காட் விக்ரம் வேதா என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. படம் வெளியாவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் இது போன்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர், தமிழ் திரைப்படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது வருத்தமளிக்கிறது என்பதாலும், மற்றொரு தரப்பினர், அந்த படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹ்ரித்திக் ரோஷன், சைப் அலி கான் ஆகியோர் ப்ரோடக்ட்ஸ் ஆஃப் நெபாட்டிசம், அதாவது வாரிசு நடிகர்கள் என்பதாலும் படத்தை புறக்கணிக்கின்றனர். மேலும், விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகும் செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று அதே நாளில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படமும்  வெளியாவது குறிப்பிடத்தக்கது. இந்த காரணங்களுக்காகத் தான் பய்காட் விக்ரம் வேதா ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.