வெளியானது போனிகபூர்- ஸ்ரீதேவி ஜோடியின் காதலை நினைவூட்டும் புகைப்படம்!! போனிக்கு ஆறுதல் கூறிவரும் ரசிகர்கள்

பிரபல சினிமா தயாரிப்பாளரான போனி கபூர் தனது மனைவி ஸ்ரீதேவியின் அரிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வெளியானது போனிகபூர்- ஸ்ரீதேவி ஜோடியின் காதலை நினைவூட்டும் புகைப்படம்!! போனிக்கு ஆறுதல் கூறிவரும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் நடிகையாக உயர்ந்தார். அதைத்தொடர்ந்து அவர் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 ஆண்டு துபாயில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து சினிமா துறையில் பல வெற்றிப்படங்களை தயாரித்துவரும் போனிகபூர் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட சில பழைய புகைப்படங்களை அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது போனி கபூர் வெளியிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதற்கு காரணம் கடந்த 2012 ஆம் ஆண்டு லக்னோ பகுதியில் நடைபெற்ற துர்கா பூஜையில் போனிகபூரும் நடிகை ஸ்ரீதேவியும்  கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் நடிகை ஸ்ரீதேவியின் முதுகில் “போனி“ என்று குங்குமத்தால் எழுதப்பட்டு இருக்கிறது. இதைப் பின்னால் இருந்து யாரோ புகைப்படம் எடுத்துள்ளனர். 

போனிகபூர்- ஸ்ரீதேவி ஜோடியின் காதலை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் இந்த அரியப் புகைப்படத்தை தற்போது போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் போனி கபூருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Boney.kapoor (@boney.kapoor)