பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் சகோதரர் கைது!!

பெங்களூருவில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக, பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் சகோதரர் கைது!!

தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் கொண்டாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட நட்சத்திர விடுதியில் சோதனை செய்த பெங்களூரு போலீசார் அங்கு பயன்படுத்தப்பட்ட போதைப்பொருட்களை கைப்பற்றினர்.

தொடர்ந்து, அங்கிருந்தவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ததில் 6 பேர் போதை பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அல்சூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட 6 பேரில் பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கப்பூரின் மகனும், நடிகை ஷ்ரத்தா கப்பூரின் சகோதரருமான சித்தாந்த் கபூரும் உள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.