பிகில் படத்தை காண்பித்து சிகிச்சை - சிறுவனை சந்திக்க நேரம் ஒதுக்கிய விஜய்

சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிகில் திரைப்படம் காண்பித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் வலி மிகுதியால் துடித்த சிறுவன், தமக்கு சிகிச்சை அளிக்க முயன்ற மருத்துவர்களை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இறுதியாக மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வரும் சின்னா, சிறுவனிடம் என்ன பிடிக்கும் என கேட்க, அதற்கு நடிகர் விஜய் என்றால் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளான். உடனே கையிலிருந்த செல்பேசியில் நடிகர் விஜயின் பிகில் திரைப்படத்தை காண்பித்து சிகிச்சை மேற்கொண்டனர்.

இது இணையதளங்களில் வைரலாக, சிகிச்சை பெற்று வந்த சிறுவன், அவரது குடும்பத்தினர், சிகிச்சை அளிக்க உதவிய தன்னார்வலர் ஆகியோரை சந்திக்க, நடிகர் விஜய் நேரம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.