தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில்...தலைவரானது யார்?

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில்...தலைவரானது யார்?

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்  2022 - 2024 சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்று வந்தது.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்:

தமிழ்த் திரையுலகத்தில் எழுத்தாளர்களுக்கென்று பிரத்யேகமாக உள்ள தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி, தற்போதுள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் போட்டி: 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்நாதன் தலைமையில் காலை 8 மணி முதல் துவங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே. பாக்யராஜ் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பொதுச் செயலாளர் பதவிக்கு இயக்குநர்கள் லியாகத் அலிகானும், மனோஜ்குமாரும் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதையும் படிக்க: தெலுங்கு திரையுலகின் ”ரெபல் ஸ்டார் ” காலமானார்.. அரசியலிலும், சினிமாவிலும் தடம் பதித்தவர்..!

பொருளாளர் பதவி:
 
பொருளாளர் பதவிக்கு பால சேகரனும், ரமேஷ் கண்ணாவும், துணைத் தலைவர்கள் பதவிக்கு ‘யார்’ கண்ணன், காரைக்குடி நாராயணன், ரவி மரியா, மனோபாலா ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், மதுரை தங்கம், வி. பிரபாகர், சி.ரங்கநாதன், எம்.ரத்னகுமார், பி.சாந்தகுமார், டி.கே.சண்முகசுந்தரம், என்.வேல்முருகன் ஆகிய 10 பேர் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவு:

இன்று காலை தொடங்கிய  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலின் முடிவானது இன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. அதில் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே. பாக்யராஜ் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட்ட நிலையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலின் தலைவராக பாக்யராஜ் தேர்வாகியுள்ளார்.