அழகான பெண் குழந்தை பிறந்தது - “சகுனி” பட நடிகை ப்ரணிதாவுக்கு..!!

நடிகை ப்ரணிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததையடுத்து திரையுலகினர் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்து வருகின்றனர். 

அழகான பெண் குழந்தை பிறந்தது - “சகுனி” பட நடிகை ப்ரணிதாவுக்கு..!!

தமிழில் கார்த்தி நடித்த 'சகுனி', சூர்யா நடித்த 'மாசு என்ற மாசிலாமணி', அருள்நிதி நடித்த உதயன், 'எனக்கு வாய்த்த அடிமைகள்' உள்பட சில படங்களில் நடித்தவர் ப்ரணிதா சுபாஷ். கன்னட நடிகையான இவர், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர்.மேலும், பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருபவர்.

இவர், கடந்த ஆண்டு நிதின் ராஜு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட ப்ரணிதா தான் தாய்மையுற்று இருப்பதாக தனது கணவனின் 34 வது பிறந்தநாளின் பொழுது தெரியப்படுத்தி இருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கர்ப்ப காலத்தில் தன் உடல்நிலை குறித்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதனை தொடர்ந்து நடிகை ப்ரணிதாவுக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது, மேலும் அவர் தனது குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தையும் ப்ரணிதா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் நன்றி என தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.