பீஸ்டா..? பூவே உனக்காகவா..? உங்களுக்கு எந்த விஜய் வேண்டும்? நெல்சனிடம் கேள்வி எழுப்பிய விஜய்..!

பீஸ்டா..? பூவே உனக்காகவா..? உங்களுக்கு எந்த விஜய் வேண்டும்? நெல்சனிடம் கேள்வி எழுப்பிய விஜய்..!

தளபதி விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் விஜய்யின் பேட்டி வரும் 10ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது .

இந்த பேட்டியின் ப்ரோமோ வீடியோக்கள் அவ்வப்போது ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இந்நிலையில் தற்போது அடுத்த புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. 

அந்த வீடியோவில், ‘பீஸ்ட்’ விஜய் வேண்டுமா அல்லது பூவே உனக்காக விஜய் வேண்டுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும், இப்போது உங்களுக்கு எந்த விஜய் வேண்டும்? என்று நெல்சனிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் ’நீங்கள் புத்தாண்டு தீர்மானங்களை எடுப்பீர்களா?' என்று நெல்சன் கேட்ட கேள்விக்கு சிரித்துக் கொண்டே விஜய் பதிலளிக்கின்றார். விஜய்யின் பதிலை கேட்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.