1 வருடத்திற்கு பின் மூவி அப்டேட்.. ஹீரோவாக பாலாஜி முருகதாஸ்

1 வருடத்திற்கு பின் மூவி அப்டேட்.. ஹீரோவாக பாலாஜி முருகதாஸ்

கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியை கடைசிவரை விறுவிறுப்பாக கொண்டு சென்றவர்களில் முக்கியமானவர் பாலாஜி முருகதாஸ். 

இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை இந்த நிகழ்ச்சியின் மூலம் உருவாக்கினார். இறுதியில் பிக்பாஸ் ரன்னர் ஆக இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.

அந்த சீசன் முடிந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.  

இந்தப்படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திர் சந்திரசேகரன் தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.