முருங்கையை நம்பும் அதுல்யா... வைரல் போட்டோ ஷூட் 

முருங்கையை நம்பும் அதுல்யா... வைரல் போட்டோ ஷூட் 

வெள்ளித்திரையில் இளம் நடிகைகள் பலரும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி முன்னேறிக் கொண்டே வருகின்றனர். அந்த வகையில் தமிழில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் சின்னப் பெண்ணாக  அறிமுகமானவர் அதுல்யா ரவி. 

பின்பு  சமுத்திரகனி உடன் இணைந்து ஏமாளி என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர். இதனைத் தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு,  அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 போன்ற படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் அதுல்யா

தற்போது சாந்தனுவுடன் 'முருங்கைக்காய் சிப்ஸ்', ஜெய்யுடன் 'எண்ணித்துணிக', சிபிராஜூடன் 'வட்டம்', அமலா பால் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்து நடிக்கும் 'கடாவர்' ஆகிய படங்களில் நடிக்கும் அதுல்யா ரவி, 'முருங்கைக்காய் சிப்ஸ்' படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறார்.

அவ்வபோது போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருவார்கள் அதுல்யா. அந்த வகையில் ஊதா நிற புடவையில் மினுமினு என இருக்கும்  அதுல்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.