சம்மர் சீசனை வரவேற்பதற்காக யாஷிகா போட்ட கவர்ச்சி புகைப்படம்! கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்!!

சம்மர் சீசனை வரவேற்பதற்காக யாஷிகா போட்ட கவர்ச்சி புகைப்படம்! கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்!!

தமிழில் ’கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். அதன்பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான அடல்ட் காமெடி படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

அதனைத்தொடர்ந்து துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்பட பல படங்களில் நடித்து வந்தார் யாஷிகா. அந்த நேரத்தில்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்த யாஷிகா மக்களிடையே பிரபலமானார். ஆனால் அதற்கு பிறகு சரியாக எந்த பட வாய்ப்பும் அமையவில்லை.

அதற்கேற்றாற்போல் சமீபத்தில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா, நான்கு மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். பின் அதிலிருந்து மீண்டு வந்த அவர், தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகா, தொடர்ந்து போட்டோஷூட்களை நடத்தி அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது யாஷிகா பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. விரைவில் சம்மர் சீசன் தொடங்கவுள்ளதையடுத்து, யாஷிகா கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்தப் புகைப்படங்களை விட அதற்கு நெட்டிசன்கள் பதிவு செய்துள்ள கமெண்ட்ஸ்கள் தான் மிக சுவராஸ்யமாக உள்ளது என்றே சொல்லலாம்.

View this post on Instagram

A post shared by Y A S H


68 இரட்டையர்கள் ஜோடி! களை கட்டிய ‘குட்ச்சி’யின் மிலான் ஃபேஷன் வீக்!

குட்ச்சி என்ற பிரபல சர்வதேச பிராண்ட், தனது சமீபத்திய நிகழ்ச்சியில், தனது புதிய வடிவமைப்புகளை 68 இரட்டை ஜோடிகளை வைத்து நிகழ்த்தியுள்ளனர். இது பெரும் வைரலாகியுள்ளது.

மிலான் என்ற இடம், ஃபேஷனுக்காகவே இருக்கும் இடம் அது. அதிலும், பிரபல சர்வதேச வடிவமைப்பாளர்களான குட்ச்சி நிறுவனம் தங்களது புதிய டிசைன்களை வெளியிடுவதற்கு, எப்போதும் ஃபேஷன் வீக் வைப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று குட்ச்சியின் மிலன் ஃபேஷன் வீக் ஷோவில் நாகரீகர்கள் இரட்டிப்பாகினர், இத்தாலிய சொகுசு லேபிளுடன் ஒரே மாதிரியான உடையணிந்த இரட்டையர்களை கேட்வாக்கில் அனுப்பி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர். கிரியேட்டிவ் டைரக்டர் அலெஸாண்ட்ரோ மைக்கேல் இரட்டையர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

மேலும் படிக்க | கன்னியாகுமரியில் இருந்து வந்த மருத்துவ அழகி!

"குஸ்ஸி ட்வின்ஸ்பர்க்" என்று அழைக்கப்படும் நிகழ்ச்சிக்காக அவர்களின் பிணைப்பு, இரட்டையர்களுக்காக ஆண்டுதோறும் திருவிழாவை நடத்தும் ஓஹியோ நகரத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஒற்றை மாதிரிகள் கேட்வாக்கில் நடந்து செல்வதுடன், ஒரு சுவர் உருவாவதற்கு முன்பு விளக்கக்காட்சி தொடங்கியது. அதே ஆடைகளில் மறுபுறம் உள்ள தங்கள் சகோதரர்கள் அல்லது சகோதரிகளைக் காட்ட தூக்கப்பட்டது.

மைக்கேலின் வடிவமைப்புகள் சஸ்பெண்டர் போன்ற கால்சட்டை கால்களுடன் இணைந்த கருப்பு நிற பிளேசர் ஜாக்கெட்டுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து ஒரு பிரகாசமான சிவப்பு பெல்ட் ஆடை.   பைக்கர் ஜாக்கெட்டுகள் கட்-அவுட்களைத் தாங்கிய பாவாடைகளுடன் இணைக்கப்பட்டன, மின்னும் வெள்ளி ஜாக்கெட்டுகள் வெட்டப்பட்டு பெரிய தோள்களைக் கொண்டிருந்தன, அதே நேரத்தில் வண்ணமயமான ஆடைகளில் அச்சிட்டுகள் ஸ்பேனர்கள் மற்றும் போல்ட்கள் சித்தரிக்கப்பட்டன.

மேலும் படிக்க | நித்தம் ஒரு வானம்- அழகான காதல் கதையா? இல்லை பழைய வடையா?

மாடல்கள் தரை-நீள டிரெஞ்ச் கோட்டுகள், மலர் கிமோனோ-ஈர்க்கப்பட்ட டிசைன்கள் மற்றும் ரஃபிள் செய்யப்பட்ட பட்டு ஆடைகளை அணிந்திருந்தனர். அணிகலன்களில் நீளமான மணிகள் கொண்ட நகைகள் மற்றும் சன்கிளாஸ்கள், சிறுத்தை அச்சு டைட்ஸ் மற்றும் பாம்பு தோல் பூட்ஸ் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | சமந்தாவின் கண் பறிக்கும் அழகில் மயங்கும் இளைஞர்கள்!

நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் நிதியுதவி..! நெகிழ்ந்து நன்றி தெரிவித்து வீடியோ..!

சிறுநீரக பிரச்னையால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் போண்டா மணி அனுமதி..!

தெரிந்தும், தெரியாத நடிகர்கள்:

சினிமாவில் இன்று நாம் திரையில் முன்னணி நடிகர்களாக பார்க்கும் நடிகர்களை தாண்டி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள், ஹீரோக்களுடன் நண்பர்களாக நடிப்பவர்கள், நகைச்சுவை நடிகர்களோடு சேர்ந்து சிறு கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் நிலையை, முன்னணி நடிகர்களோடு ஒப்பிடவே முடியாது. அவர்கள் வாங்கும் சம்பளத்தின் 1 பங்கினைக் கூட இவர்கள் வாங்க மாட்டார்கள்.

பொருளாதார சிக்கல்:

அப்படி சினிமாவை விட்டு பாதியிலேயே சென்றவர்கள், சினிமாவில் பல நூறு படங்களில் நடித்தும் பெரிதாக பொருளாதார வசதி இல்லாதவர்கள் இங்கு நிறைய உண்டு. அவ்வாறு சினிமாவில் முகம் தெரிந்தும், பொருளாதாரத்தில் நலிவடைந்து, இறுதியில் உடல் நலம் குன்றி உயிரிழந்தவர்கள் பலர். இவர்களுக்கு  உதவ முன்வருவதும் சில சினிமா நடிகர்கள் மட்டும் தான். 

சிகிச்சை பெற்று வரும் போண்டா மணி:

அப்படி சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் நடிகர் போண்டா மணி. நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். உதாரணத்திற்கு சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்ற காமெடியில் இவரது நடிப்பு பிரபலமானது. 

 

சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை:

வயது மூப்பாலும், சரியான வாய்ப்பு கிடைக்காததாலும் இவர் தற்போது சினிமாவில் இருந்து தள்ளி வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சிறுநீரக பிரச்னையால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போண்டா மணிக்கு, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும், மேல் சிகிச்சைக்காக அவருக்கு உதவக் கோரியும் நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்:

இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவரை நேரில் சென்று சந்தித்து மருத்துவ செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் என ஆறுதல் கூறியிருந்தார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்த நடிகர் வடிவேலு நிச்சயம் போண்டா மணிக்கு உதவுவேன் எனக் கூறியிருந்தார். 

சங்கங்கள் நிதியுதவி:

அத்தோடு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் மனோபாலா போண்டா மணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு, நிதியுதவி வழங்கினார். அதேபோல சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பிலும் அவருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. 

தனுஷ் ரூ.1லட்சம் நிதியுதவி:

இந்த விஷயம் குறித்து தகவலறிந்த நடிகர் விஜய் சேதுபதி போண்டா மணிக்கு ரூ.1லட்சம் அளித்திருந்தார். அத்தோடு தற்போது நடிகர் தனுஷும் ரூ.1லட்சம் உதவி அளித்திருக்கிறார். இதற்காக நடிகர் தனுஷூக்கு நன்றி தெரிவித்து போண்டா மணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் அமோக வெற்றி...! பரிசுகளை வாரி வழங்கிய தயாரிப்பாளர்..!

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்காக சிம்புவுக்கும், இயக்குனர் கௌதம் மேனனுக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசுகளை வழங்கி கொண்டாடியுள்ளார்.

ரொமான்டிக் ஹீரோ என்று சொல்வது போல் ரொமான்டிக் இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு திரைப்படம். செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாணடமாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது.

ஒரு சாதாரண, தமிழகத்தை சேர்ந்த இளைஞன் வேலைக்காக மும்பை சென்று அடிதடியில் சிக்கி எப்படி டான் ஆகிறான் என்பதே படத்தின் கதைக்கரு. இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.10.86 கோடி வசூல் செய்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். மேலும் படத்தின் பாடல்கள் படு ஹிட்டாகின. அதிலும் குறிப்பாக மதுஸ்ரீ பாடிய 'மல்லிப்பூ' பாடல் ட்ரெண்டாகி பலரது வாட்ஸப் ஸ்டேட்டஸ் ஆகவும் இன்ஸ்டகிராம் ரீல்ஸ் ஆகவும் உள்ளது. 

 

இந்நிலையில் படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளரான வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் சிம்புவுக்கும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும், பரிசுகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் நடிகர் சிம்புவுக்கு, ரூ. 92 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா வெல்பையர் ரக சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார். அதே போல், இயக்குனர் கௌதம் மேனனுக்கு பைக் மிகவும் பிடித்தமான ஒன்று என்பதால், ராயல் என்பீல்டு பைக் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே போன்று முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் படத்தின் வெற்றிக்காக, நடிகர் கமல்ஹாசன் சொகுசு கார் ஒன்றை இயக்குனர் லோகேஷுக்கு பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்கனாமிக் வகுப்பில் பயணித்த சோழர்கள்!

“பொன்னியின் செல்வன் - 1” ப்ரொமோஷனுக்காக விமானத்தில் ஒன்றாக பயணித்த படக்குழுவுடன், நடிகர்களும், ஏ.ஆர்.ரஹ்மானும் எக்கனாமிக் வகுப்பில் பயணம் செய்திருக்கின்றனர்.

1950களில் உருவான கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புணைப்பு கதையினை படமாக்கி வரும் செப்டம்பர் 30ம், தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள் படு பயங்கரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது படத்தின் ப்ரொமோஷனுக்காக ஹைதராபாத், பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற இடங்களுக்கு ஒன்றாகவே பயணித்து வரும் படக்குழுவின் போட்டோக்கள் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், தற்போது ஒரு போட்டோ இணையத்தில் படு ட்ரெண்டிங்கில் உள்ளது.

மேலும் படிக்க | ராஜராஜ சோழனுடன் ஐயப்பன் தரிசனம் பெற்ற நம்பி!

பெரும் நட்சத்திரங்களான த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வரியா ராய் ஆகியோருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும், விமானத்தில் எக்கனாமிக் பிரிவில் பயணம் செய்யும் போட்டோ அனைவரது கவனத்தையும் பெற்றது.

சோழர்கள் இப்படி மக்களுடன் பயணிக்கின்றனரே என்றும், தன்னடக்கம் மிக்க தென்னிந்திய நடிகர்கள் என்றெல்லாம் இந்திய சினிமா ரசிகர்களால புகழாரம் பெற்று வரும் நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு இதன் மூலம் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | #EXCLUSIVE | எங்களுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை! - நடிகர் கார்த்தி

View this post on Instagram

A post shared by ARR (@arrahman)

‘துணிவு’க்கு போட்டியாக ‘வாரிசு’ வருகிறார்! இன்னும் இரண்டு பாடல்கள் தான்!

வாரிசு படத்தின் கடைசி ஷெடியூல் நாளை துவங்க இருக்கிறதாம்! படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது.

வாரிசு என்ற படம் தற்போது விஜய் நடிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வருகிறது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில், விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது படபிடிப்பு முடியப்போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் படு குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் படிக்க | வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்..! ஒய்யாரமாக நடைபோடும் விஜய்..!

ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?

சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், விஜய் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் படம் தான் ‘வாரிசு’ அல்லது ‘வாரிசுடு’ (தெலுங்கு). ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத் குமார் மற்றும் பல பெரும் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட் வருகிற செப்டம்ர் 27ம் தேதி வரும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு நாளை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஏகே 61 படத்தின் தலைப்பு, “துணிவு”!

தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “படத்தின் லாஸ்ட் ஷெடியூள் நாளை துவங்குகிறது. இன்னும் இரண்டு சீக்வன்சுகளும், இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டும். பிரம்மாண்டமான ‘வாரிசு பொங்கலுக்கு’ காத்திருங்கள்” என பதிவிட்டிருந்தது. இதற்கு ரசிகர்கள் தீ பறக்கும் இமோஜிகள் போட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | வெளியான ”துணிவு” 2-ன்ட் லுக்.. பெரிய வித்தியாசம் எதுவும் இல்லையே..!

இன்று காலை தான் ஏகே 61 படத்தின் படபிடிப்பு முழுமையாக முடித்து விட்டு அஜித் குமார் விமான நிலையத்தில் ரசிகர்களுக்கு காட்சியளித்தார். கம்பீரமான, “துணிவு” என்ற தலைப்பு வெளியாகி, அஜித் ரசிகர்களை அப்படக்குழு உற்சாகக் கடலில் ஆழ்த்திய நிலையில், விஜயின் இந்த அப்டேட், விஜய் ரசிகர்களுக்கு படு குஷியைக் கொடுத்துள்ளது.

மேலும் படிக்க | இந்தியன் 2 - க்கு தயாராகி வரும் காஜல் அகர்வால்! குதிரையில் சவாரி செய்த வீடியோ வைரல்!!!

பல ஆண்டுகளுக்குப் பிரகு, மீண்டும் தீப்பறக்கும் போட்டி, அஜித் மற்றும் விஜய்க்கு இடையில் உருவாகியுள்ளது நன்றாக வெளிப்பட்டு வரும் நிலையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் திக்குத்திசை தெரியாமல் உற்சாகத்தில் தத்தளித்து வருகின்றனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.