சிவகார்த்திகேயனை தொடர்ந்து ஆர்யாவின் படம் ஓடிடியில் ரிலீஸ்..?

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி நடித்திருக்கும் சார்பட்டா பரம்பரை படம் ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோ வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயனை தொடர்ந்து ஆர்யாவின் படம் ஓடிடியில் ரிலீஸ்..?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடித்த டெடி திரைப்படம் கடந்த மார்ச் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. இப்படத்திற்கு குழந்தைகளிடம் மட்டுமல்லாது, இளைஞர்களிடமும் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி நடித்திருக்கும் சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில்அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் டாக்டர்,  மிர்ச்சி சிவாவின் இடியட் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.