விருமன் பட கார்த்தியை வைத்து இயக்கும் அருண்ராஜா காமராஜ்..!! வெளியான புதிய தகவல்..

கனா படம் மூலம் இயக்குனராக  அறிமுகமான அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக விருமன் படத்தில் நடித்து வரும் நடிகர் கார்த்தியை வைத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விருமன் பட கார்த்தியை வைத்து இயக்கும் அருண்ராஜா காமராஜ்..!!  வெளியான புதிய தகவல்..

நடிகர் இயக்குனர் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவரின் இயக்கத்தில் 2018 ஆம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ஆர்ட்டிகிள் 15 என்கிற இந்தி படத்தின் ரீமேக்கான நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் அருண்ராஜா காமராஜ் இயக்கைருக்கும் அடுத்த படத்திற்கு கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கான படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், இப்படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கார்த்தி தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.