என்ன விட குதிரை கிட்ட தான் அதிகமா பேசுற-வந்தியத்தேவனைக் கிண்டல் செய்த அருண்மொழி வர்மன்:

பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகளில் இறங்கியிருக்கும் படக்குழு, பொன்னி நதி பாடலின் உருவாக்கம் போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிடுள்ளது.

என்ன விட குதிரை கிட்ட தான் அதிகமா பேசுற-வந்தியத்தேவனைக் கிண்டல் செய்த அருண்மொழி வர்மன்:

தமிழகத்தின் பெருமையாக விளங்குவது சோழ பாண்டியர்களின் வரலாறு தான். அதில், சோழர்களின் பெருமையை விவரிக்கும் வகையில், வரலாற்று உண்மைகளுடன் சேர்த்து, 1950களில், கல்கியால் எழுதப்பட்ட ஒரு மாபெரும் கதை தான் பொன்னியின் செல்வன். அதனை படமாக்க, பல வருடங்களாக எம்ஜிஆர் உட்பட பல பெரும் திரைப் பிரபலங்கள் இக்கதையை படமாக்க முயற்சி செய்த நிலையில், பல ஆண்டு தமிழ் சினிமா பிரார்த்தனைக்கு பதிலளிக்கும் வகையில், பொன்னியின் செல்வன் படம் மணிரதனத்தின் படைப்பாக உருவாகி இருக்கிறது.

வெளியானது வந்தியெத்தேவனின் தேடுதலை வெளிப்படுத்தும் பொன்னி நதி பாடல்:

நட்சத்திரப் பட்டாளம்:

பல பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. அதில், முக்கிய கதாபாத்திரங்கள் சுமார் 30 இருக்க, ஐஸ்வரியா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, சரத் குமார், ஆர் பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வரியா லக்ஷ்மி, ரஹ்மான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பான் இந்தியா படம்:

வருகிற செப்டம்பர் 30ம் தேதி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உலக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகள் படு பயங்கரமாக நடந்து வருகிறது.

மேலும் படிக்க: பான் உலகப் படமாக உருவெடுக்குமா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்?

‘பொன்னி நதி’ பாடல்:

ஏ. ஆர். ரஹ்மான் இசையில், இளங்கோ சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல், பொன்னி நதி, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பொன்னியின் செல்வன் கதை களம் நகர்வதே தூதுவன் வந்தியத்தேவனின் பார்வையில் தான் என்ற வகையில், படத்தின் முதல் காட்சியாக, சோழ நாட்டில் காலெடுத்து வைக்கும் வந்தியத்தேவனின் அனுபவங்களையும், அந்த ஊரில் அவர் ரசிக்கும் அழகுகளையும் விளக்கும் இந்த பாடல், இன்றைய காலத்து இசைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

ப்ரொமோஷன் வேலைகள்:

இந்த பாடலின் உருவாக்கத்தை, தற்போது வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு. அதில், பொன்னி நதி பாடலில் வரும் காட்சியமைப்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. நடன இயக்குனர் பிருந்தா இந்த பாடல் குறித்து பேசுகையில், “ஏ.ஆர். ரஹ்மானின் இசையைக் கேட்டதுமே, என்னையே அறியாமல் என் உடல் ஆட ஆரம்பித்து விட்டது.” என்று கூறி ஆடத் துவங்கி விட்டார்.

மேலும் படிக்க: யார் இந்த அருண்மொழி வர்மன்? ப்ரொமோஷன் வேலைகளைத் துவங்கிய பொன்னியின் செல்வன் குழு:

வந்தியத்தேவனுக்கு பெண்கள் பிடிக்கும்:

மேலும், “வந்தியத்தேவன் இந்த ஊருக்கு முதன் முறையாக வருகிறார். அப்போது ஊரில் திருவிழா நடந்தால் எப்படி இருக்கும்? அந்த திருவிழாவுக்கு இடையில் ஊருக்கு விரசம் செய்கிறார். அப்போது, அவருக்குப் பிடித்தது போல, பெண்கள், கொண்டாட்டம் என கோலாகலமாக இருக்கும். அதனை இந்த பாடல் மூலம் வெளிப்படுத்த விரும்பினேன்” என்று கூறினார்.

வந்தியதேவனுக்கு அடங்காதவர்கள்:

பொன்னியின் செல்வன் கதையில், வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு, அடங்காத கதாபாத்திரம் பூங்குழலி. அவருக்கு சமனாக இருப்பது, செம்பன் என்ற அவரது குதிரை தான். அந்த குதிரையானது பல சேட்டைகளை செய்வதாக கார்த்தி இந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: வெளியானது வந்தியெத்தேவனின் தேடுதலை வெளிப்படுத்தும் பொன்னி நதி பாடல்:

கிண்டல் செய்த பொன்னியின் செல்வன்:

பொன்னியின் செல்வன் அதாவது ராஜ ராஜ சோழனாகும் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெயம் ரவி, தூதுவன் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தியைப் பார்த்து, “என்னிடம் பேசியதை விட, அந்த குதிரையோடு தான் அதிகமாக பேசியிருக்கிறாய்” என்று கேளி செய்துள்ளார்.

இந்த வீடியோவில் வரும் காட்சிகள், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.