உதயநிதியின் - “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தின் தகவலை வெளியிட்டார் அருண்ராஜா காமராஜ்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி!

உதயநிதியின் - “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தின் தகவலை வெளியிட்டார் அருண்ராஜா காமராஜ்!

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில் சற்று முன்னதாக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தன்னின் சமூக வலைத்தளப்பக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தினுடைய சென்சார் தகவலை பகிர்ந்து இருக்கிறார். இத்திரைப்படத்தை பார்த்து விட்டு சென்சார் அதிகாரிகள் “யுஏ” சான்றிதழ் அளித்து இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த படத்தினுடைய சென்சார் பணிகள் முடிவடைந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீடு தேதியானது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.