”விக்ரம்” படம் பார்த்து கண்கலங்கிய அனிருத்...!

’விக்ரம்’ படத்தை பார்த்து கண்கலங்கியதாக புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அனிருத் கூறியுள்ளார்.

”விக்ரம்” படம் பார்த்து கண்கலங்கிய அனிருத்...!

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தமிழ் திரைத்துறையின் மாபெரும் உச்ச நட்சத்திரம் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. நாளை வெளியாக உள்ள இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த படம் பற்றி வெளியாகும் தகவல்கள் ஒவ்வொன்றும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி வருகின்றது. 

இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள இப்படத்திற்கு இன்றளவும் புரமோஷன் பணிகள் பல ஊர்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ’விக்ரம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அனிருத், கமல் சார் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் எங்களுக்கு ஸ்பெஷலான படம். நான் எப்போதும் எமோசனல் ஆக மாட்டேன். ஆனால் தற்போது விக்ரம் படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு படம் பார்த்தபோது லோகேஷ் கனகராஜிடம் கண்கலங்கி விட்டேன். அந்தளவுக்கு கமல் சாரின் நடிப்பு பிரமிக்க வைத்தது. இப்படி ஒரு படத்தில் பணியாற்றியதை நான் ரொம்ப பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

சோஷியல் மீடியா, மீடியா என எந்த பக்கம் திரும்பினாலும் விக்ரம் விக்ரம் தான்...அந்த அளவிற்கு படம் பற்றிய ஆவல் அனைவரிமும் உள்ளது. இதற்கிடையில் இசையமைப்பாளர் அனிருத் படம் பார்த்து கண்கலங்கி இருப்பதாக கூறியிருப்பது படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.