ஒட்னிகா பாடலை காப்பி அடித்தாரா அனிரூத்?

லியோ திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ORDINARY PERSON என்ற பாடலில் லிரிக்கல் வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. 

இதையும் படிக்க : சென்னை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிடவுள்ள மீனவர்கள்...!

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ORDINARY PERSON என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. அனிரூத் இசையில் வெளியான இந்தப் பாடல், NETFLIX-ல் வெளியாகி இருந்த Peaky Blinders தொடரில் இடம்பெற்றிருந்த ஒட்னிகாவின் WHERE ARE YOU என்ற பாடலின் காப்பி என இணையத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதற்கு தனது இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ள ஒட்னிகா, லியோ திரைப்படம் குறித்து பல குறுஞ்செய்திகள் வருவதாகவும், தற்போதைய நிலைமை தெளிவாக இல்லை எனவும், இது குறித்து விசாரித்து பிறகு பதில் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.