பேரக் குழந்தையை வரவேற்ற அணில் கபூர்! நெகிழ்ச்சியான கடிதம் பதிவு!

நடிகர் அணில் கபூர் மகள் சோனம் கபூருக்கு, மகன் பிறந்துள்ளார். இந்த செய்தி சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தனது சோசியல் மீடியாவில் மனதை உருக்கும் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பேரக் குழந்தையை வரவேற்ற அணில் கபூர்! நெகிழ்ச்சியான கடிதம் பதிவு!

என்றும் மாறா இளமையில் இருப்பவர் என்றால், அது நடிகர் அணில் கபூர் தான். தனது 60களிலும், 20 களில் இருப்பது போலே அதே உடல் கட்டமைப்புடன், இளமையான தோற்றத்தில் வலம் வரும் அணில் கபூருக்கு தற்போது பேரக்குழந்தையே பிறந்து விட்டது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனமுருகும் வகையில் ஒரு பெரிய கடிதத்தைப் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு, நெட்டிசன்களுக்கு நெகிழ்ச்சி அளிப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அணில் கபூரின் மகள் சோனம் கபூர், டெல்லி-6 என்ற படம் மூலம், பாலிவுட்டில் அறிமுகம் ஆகி, பல ரசிகர்களைக் கவர்ப்ந்திருழுத்தார். கடந்த 2018ம் ஆண்டு, பிரபல தொழிலதிபரான ஆனந்த் ஆகுஜாவை திருமணம் செய்து கொண்ட சோனம் கபூருக்கு, தற்போது, மகன் பிறந்திருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார். இதற்கு பல பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by anilskapoor (@anilskapoor)

இதனைத் தொடர்ந்து, சோனமின் தந்தையான அணில் கப்பூருக்கும், பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான கடிதத்தைப் பதிவிட்டிருக்கிறார் அவர். இந்த கடிதம், நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

"எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரின் வருகையை, இன்று ஆகஸ்ட் 20, 2022 அன்று அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சோனம் மற்றும் ஆனந்த் இந்த தினத்தில், ஆரோக்கியமான குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்கை வார்த்தைகள் இல்லை. புதிய பெற்றோர்கள் மற்றும் அவர்களின் அழகான தேவதை போன்ற குழந்தையின் மீது எங்கள் இதயங்கள் மூழ்குகின்றன. புதிய தாத்தா பாட்டிகளான ஹரிஷ் & பிரியா மற்றும் அனில் & சுனிதா, உற்சாகமான அத்தைகள் மற்றும் மாமாக்களான ரியா, கரண், ஆனந்த் மற்றும் ஹர்ஷ்வர்தன் சார்பாக இந்த பதிவு” என அந்த கடிதம் கூறுகிறது.

இந்த கடிதம் மூலம், அணில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது தெரிகிறது. புதிதாக குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்ற சோனம் கபூர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் உதவிய நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி எனப் பதிவிட்டு, தனது குழந்தை பிறந்த செய்தியை வெளியிட்டார்.

இந்த இன்பச் செய்தி, அவர்களது ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும், மன நிரைவு தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.