சமந்தாவை பின் தொடர்ந்த நடிகை ஆண்ட்ரியா...அப்படி என்ன செய்தார்..?

சமந்தாவை பின் தொடர்ந்த நடிகை ஆண்ட்ரியா...அப்படி என்ன செய்தார்..?

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகையாக இருக்கும்  நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தனது பாடலால் அனைவரையும் கட்டி வைத்துள்ளார். சமீபத்தில்  ‘புஷ்பா’ படத்திற்கு இவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மக்களிடையே செம ஹிட் கொடுத்திருந்தது. 

இப்படி நடிகை, இசை ஆர்வலர் மற்றும் பின்னணி பாடகி எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட நடிகை ஆண்ட்ரியா ஒரு சிறந்த புத்தக வாசிப்பாளரும் கூட. அவர் வாசிக்கும் புத்தகங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார். இந்நிலையில் தற்போது காஷ்மீர் சென்ற ஆண்ட்ரியா அங்கு பனிச்சறுக்கில் விளையாடிய வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில் சுவிட்சர்லாந்து சென்றிருந்த நடிகை சமந்தா அங்குள்ள பள்ளத்தாக்கில் பனிச்சறுக்கு விளையாடியதோடு அடுத்தக் கட்டமாகப் பயிற்சியையும் எடுத்துக்கொண்டார். அந்த வகையில் தற்போது காஷ்மீர் சென்றுள்ள நடிகை ஆண்ட்ரியா பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் இதுவே என் முதல் அனுபவம் என்பதையும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.