ஹேர்ஸ்டைலிஸ்டுக்கு 2 லட்சம் மதிப்பில் பைக்கை பரிசாக அளித்த நடிகர் அமித்:

பாலிவுட் நடிகரான அமித் சாத் தனது ஹேர் ஸ்டைலிஸ்ட் தாலிப் ஹுசைன் என்பவருக்கு இரண்டு லட்சம் மதிப்புள்ள ஒரு பைக்கை  பரிசாக அளித்துள்ளார். 

ஹேர்ஸ்டைலிஸ்டுக்கு 2 லட்சம் மதிப்பில்  பைக்கை பரிசாக அளித்த நடிகர் அமித்:

Phoonk 2 என்ற படத்தின் மூலம் கடந்த 2010ம் ஆண்டு வெளியான படத்தின் அறிமுகமானவர் நடிகர் அமித் சாத். பின்னர் அவரது நடிப்பில் kai po che, guddu rangeela, sultan, akira, sarkar 3, super 30 போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர். தொலைக்காட்சி தொடர், வெப் தொடர் அல்லது வெள்ளித்திரை படங்கள் என எதுவாக இருந்தாலும் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதாய் பேசும்படியாக அமைந்திருக்கும். மேலும், சமீபத்தில் வெளியான, 'பேட்மேன்: ஏக் சக்ரவ்யூ', என்ற ஆடியோ தொடரும் மக்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது நடிகர் அமித் சாத் தனது ஹேர் ஸ்டைலிஸ்டான தாலிப் ஹுசைன் என்பவருக்கு, யமஹா ஜாவா பைக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதன் இந்திய மதிப்பு 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தனது ஹேர்ஸ்டைலிஸ்டான தாலிப் சில சிறந்த வேலைகளைச் செய்து வருவதாக உணர்ந்த அமித், தனது பாராட்டுக்களைக் காட்ட அவருக்கு ஏதாவது பரிசு கொடுக்க விரும்பியிருக்கிறார். அதனால் தான் இந்த பைக்கை பரிசாக அளித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் ரசிகர்களும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். முன்னதாக நடிகர் கமல்ஹாசன் தனது விக்ரம் படத்தின் வெற்றிக்கு இயக்குனர், உதவி இயக்குனர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amit Sadh - Biography, Height & Life Story | Super Stars Bio