ஆலியா மானசா மீண்டும் கர்ப்பம்...எத்தனாவது மாசம் தெரியுமா...!

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சின்னத்திரை பிரபலமான ஆலியா மானசா தெரிவித்துள்ளநிலையில், அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஆலியா மானசா மீண்டும் கர்ப்பம்...எத்தனாவது மாசம் தெரியுமா...!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி. இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. காதல் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி தற்போது இருவருமே சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.



கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்தாலும் எங்களுடைய வேலையில் கவனம் குறையாது என்பதை நிரூபித்து இருவரும் வெவ்வேறு சீரியல்களில் பிசியாக கலக்கி வருகின்றனர். இந்த நிலையில் ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான்.



முதல் குழந்தைக்கு இரண்டு வயது ஆகாத நிலையில் இவர் இரண்டாவதாக கர்ப்பமாக இருப்பதால் ராஜா ராணி சீரியலில் மீண்டும் ஆலியா நடிப்பாரா?? என்று பலர் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில் அவருடைய ரசிகர்கள் ஆலியாவிற்கு எத்தனை மாதம் என்று ஆர்வத்தில் கேட்டுக்கொண்டிருந்தனர். ரசிகர்களுக்கு பதில் சொல்லும் பொருட்டு கணவன் மனைவி தம்பதி இருவரும் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் வெட்கத்தோடு தான் நான்கரை மாதம் கர்ப்பமாக இருப்பதை ஆலியா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.