போனி கபூருக்கு கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டும் - அஜித் ரசிகர்கள்!!

திருச்சியில் அஜித் ரசிகர்கள் ஒன்று கூடி போனி கபூரிடம் கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டி வருகின்றனர். 

போனி கபூருக்கு கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டும் - அஜித் ரசிகர்கள்!!

நடிகர் அஜித்குமாரின் 61 வது திரைப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தொலைக்காட்சி பேட்டியில் வரும் தீபாவளிக்கு அஜித்தின் படம் வெளியாகும் என்பதை போல கூறியிருந்தார். 

இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் வரும் தீபாவளி அன்று அஜித்குமாரின் திரைப்படம் வெளியாகும் தானே! சொன்னத செய்வீங்கள்ல எங்களுக்கு தல தீபாவளி தான் வேண்டும் என போனி கபூருக்கு கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டி வருவது வைரலாகி வருகிறது.